“எதுடா என்கிட்ட உன்னை ஹெவியா லைக் பண்ண வச்சது”… அஜித் – சிவா கூட்டணியைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (12:53 IST)
அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறையாக இணையப் போவதால், அவர்களைக் கலாய்த்து பல்வேறு பதிவுகள் சமூக வலைதளங்களில் போடப்பட்டு வருகின்றன.
 




சிவா இயக்கத்தில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடித்துள்ளார் அஜித். வருகிற 24ஆம் தேதி ‘விவேகம்’ படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்குகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பும் ‘வி’ என்ற எழுத்திலேயே தொடங்கும் என்கிறார்கள்.

ஒரு நடிகர், ஒரே இயக்குநரின் படத்திலேயே அடுத்தடுத்து நடிப்பது என்பது ஆச்சரியமான விஷயம். அதுவும் தொடர்ந்து 4 படங்கள் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். எனவே, வடிவேலு பாணியில், ‘எதுடா என்கிட்ட உன்னை ஹெவியா லைக் பண்ண வச்சது’ என அஜித்திடம் சிவா கேட்பது போல் மீம்ஸ்களையும், பதிவுகளையும் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அடுத்த கட்டுரையில்