உலகநாயகன் கமலஹாசன் நடிக்க வேண்டிய சில படங்களில் பிரபல நடிகர்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. குறிப்பாக தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமான ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் முதலில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அதில் ஒரு வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது
இந்த நிலையில் கமலஹாசனின் வெற்றித் திரைப்படங்களில் ஒன்றான ’விருமாண்டி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் அஜீத் ரசிகர்கள் ’விருமாண்டி 2’ படத்தின் போஸ்டர்களை வடிவமைத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரல் ஆக்கி வருகின்றனர்