சுடச்சுட முட்டை தோசை சுடும் ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரல் வீடியோ இதோ!

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (16:48 IST)
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும்  நடித்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில்  ராஷி கண்ணா, கேத்ரின் தெரெஸா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு தலத்தில் படக்குழுவினருக்கு தோசை சுட்டு கொடுத்த  வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது
’கா/பெ.ரணசிங்கம்’, ’துருவ நட்சத்திரம்’ ஆகியப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்