கொரோனா காலகட்டத்தில் தமிழ் சினிமாவை பெருமளவுக் காப்பாற்றியது ஓடிடி நிறுவனங்கள்தான். இப்போது ஓடிடி உரிமை படத்தின் வியாபாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற உலகளாவிய ஓடிடி நிறுவனங்கள் பெரும் மார்க்கெட்டை வைத்திருந்தாலும், சோனி லிவ், ஜி 5 போன்ற இந்திய அளவிலான ஓடிடி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவு வாடிக்கையாளர்களை வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய சினிமாக்களை இலக்காக கொண்டு நடிகர் அல்லு அர்ஜுனின் குடும்பம் தொடங்கிய ஓடிடி நிறுவனம்தான் ஆஹா. இப்போது ஆஹா தமிழ் என்ற பெயரில் தமிழ் சினிமாவிலும் கால்பதிக்கிறது. இந்த நிறுவனத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடந்தது. அதில் முன்னணி நடிகர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில் சிம்புவும் கலந்துகொண்டார். மேலும் அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸ்டராகவும் சிம்பு நியமிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இந்த தளத்தில் மன்மதலீலை, ரைட்டர், செல்பி உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ள அடுத்து நேரடி ஓடிடி வெளியீடாக பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் விதார்த் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.