மீண்டும் அந்த இடத்திற்கே செல்ல விரும்பும் நடிகை கெளதமி!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (16:10 IST)
ஆந்திராவை சேர்ந்த நடிகை கெளதமி தாயமாயுடு தெலுங்கு படம் மூலம் நடிகையானவர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். பிறகு உலக நாயகன் கமல்ஹாஸனுடன் சேர்ந்து வாழத் துவங்கிய பிறகு ஓரிரு படங்களில் நடித்தார்.

 
13 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த கமல்- கெளதமி பிரிவுக்கு பிறகு கெளதமி படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.  தற்போது அவர் விஸ்வாசபூர்வம் மன்சூர் மற்றும் இ ஆகிய மலையாள படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த கவுதமி முடிவு செய்துள்ளார். தனது தாய் மொழியான தெலுங்கில் கூடுதல் படங்களில் நடிக்க  விரும்புவதாக கூறப்படுகிறது.
 
தெலுங்கில் நல்ல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் கெளதமி. பிறமொழி படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களில்  நடிக்க ஆர்வமாக உள்ளாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்