நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயுடன் இணையும் ஜோதிகா!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (12:33 IST)
ஜோதிகா கடந்த 2007ஆம் ஆண்டு அர்ஜுனுக்கு ஜோடியாக மணிகண்டா என்ற படத்தில் நடித்து முடித்தவுடன் திருமணமாகி அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகினார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் மீண்டும் ஜோதிகாவை 36 வயதினிலே படம் மூலமாக திரையில் பார்க்க முடிந்தது.


 
 
தற்போது இளைய தளபதி விஜய் அடுத்து அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஒரு பவர்புல் பெண் கதாபாத்திரம் இருக்கிறதாம்.
 
இதற்காக நடிகை ஜோதிகாவிடம் இதில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது. அவர் மட்டும் சம்மதித்துவிட்டார் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இதனிடையே 13 வருடம் கழித்து விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளாரா ஜோதிகா என்ற பரபரப்பில் மூழ்கியிருக்கிறது கோடம்பாக்கம். இந்த படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளிவர உள்ளதாகவும் படப்பிடிப்புகள் வருட தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்