ஜோடியா வந்து காதலை உறுதி செய்த சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி - வைரல் வீடியோ!

சனி, 8 ஏப்ரல் 2023 (10:06 IST)
இந்தி சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் அதிதி ராவ். தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். 
 
சமீப காலமாக அதிதி ராவ் ஹைதாரியும், பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. அத்தனை வெளிப்படையாக இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் ஜோடியாக நடனமாடுவது, அவுட்ங் செல்வது உள்ளிட்ட வீடியோக்களை அவர்களாகவே வெளியிட்டு மறைமுகமாக காதலை ஒப்புக்கொண்டுள்ளனர். 
 
அந்தவகையில் தற்போது திரைப்பட நிகழ்ச்சி ஒன்றிற்கு  சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி இருவரும் ஜோடியாக வந்து போஸ் கொடுத்தனர். அப்போது அவர்களை படம் பிடித்த போட்டோகிராபர் "Lovely ஜோடி" கூறினார். அதற்கு அதிதி வெட்கத்துடன் ஸ்மைல் பண்ணிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்