நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுட்டேன்.. அதுக்கு நல்லா கிடைச்சது.. விமல் புலம்பல்!

சனி, 26 ஆகஸ்ட் 2023 (13:26 IST)
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது. இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் துடிக்கும் கரங்கள் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விமல் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் “சினிமாவுக்கு வந்த போது, நீட்டிய இடத்திலெல்லாம் படத்துக்காகதானே என கையெழுத்து போட்டுட்டேன். அதற்கெல்லாம் சேர்த்து மொத்தமாகக் கிடைத்துவிட்டது. இதனால் பல பிரச்சனைகள் வர, என்னை வைத்து படமெடுக்கலாமா என தயாரிப்பாளர்களை யோசிக்க வைத்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகள் படமே இல்லாமல் ஓடிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்