கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்கள் சிகிச்சையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.