தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் சுதா. இவர் செல்வராகவன் இயக்கிய 7 ஜி படத்தில் நாயகன் ரவி கிருஷ்ணாவுக்கு தாயாக நடித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பின் போது செல்வராகவன் இவரிடம் மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். இதனால் கோபமான சுதா மரியாதையாகப் பேசுங்கள் எனக் கூறிவிட்டு ஸ்பாட்டை விட்டுக் கிளம்பிச் சென்றுள்ளார்.