15 வயதில் 50 முறை முத்தம்! இயக்குனர் மீது சஞ்சனா கல்ராணி பகீர் புகார்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (15:58 IST)
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, தனக்கு 15 வயதாக இருக்கும் போது பிரபல இயக்குனரால் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
 
பிரபல தமிழ் நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, இவர் கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் சஞ்சனா நடித்துள்ளார்.  
 
இவர் கன்னட மொழி பத்திரிக்கை ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "என்னுடைய 15 வயதில் 'கண்ட ஹென்தாதி' என்ற கன்னட படம் மூலம் முதல்முறையாக திரையுலகுக்கு அறிமுகம் ஆனேன்.அந்த படம் மல்லிகா ஷெராவத்  ஹிந்தியில் நடித்த murder'  படத்தின் ரீமேக் ஆகும். அந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு முத்தக்காட்சியை 50 முறை எடுத்து இயக்குனர் ரவி ஸ்ரீநிவஷ்தா எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் என்னை மிகஆபாசமாக படத்தில் காட்டினார்கள்" என்றார்.
 
இந்த புகாரை இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் சஞ்சனா, எந்த திருடராவது தன்னை திருடர் என்று ஒப்புக்கொண்டது உண்டா? நான்  பல இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளேன். அவர்கள் குறித்து நான் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. இவர் தவறானவர் என்பதால் தான் இந்த குற்றச்சாட்டை கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்