நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு தனது பெயரான சமந்தா ருத் பிரபு என்கிற பெயரை சமந்தா அக்னினேனி என மாற்றிக்கொண்டார். இது நாக சைதன்யாவின் குடும்ப பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் முதலிரவில் இருப்பது போன்ற படம் போட்டு, “மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம் ” என குறிப்பிட்டுள்ளார்.