நான் தான் அந்த யோகிபாபுவின் வதந்தி மனைவி: வைரலாகும் வீடியோ

செவ்வாய், 26 நவம்பர் 2019 (09:04 IST)
யோகிபாபுவுடன் திருமணம் நடந்துவிட்டதாக வைரலாகி வரும் வதந்தி மனைவி நான் தான் என நடிகை சபீதாராய் தெரிவித்துள்ளார்.
 
நேற்று யோகிபாபுவுக்கும் ஒரு நடிகைக்கும் திருமணம் ஆகிவிட்டதாக ஒரு புகைப்படம் வைரலாகிய நிலையில், அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை சபிதாராய் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது விளக்கத்தை அளித்துள்ளார்
 
கடந்த 2017ஆம் ஆண்டு யோகிபாபுவுடன் ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்தேன். அப்போது அவருடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருமண புகைப்படமாக லீக் ஆகியுள்ளது. இதை பார்த்து அழுவதா? சிரிப்பதா? கோபப்படுவதா? என்றே எனக்கு தெரியவில்லை
 
செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம், ஆனால் ஒரு வதந்திக்கு இவ்வளவு முக்கியத்துவமா கொடுப்பது? யோகிபாபு என்னுடைய நண்பர், சக நடிகர். அதை தாண்டி அவருக்கும் எனக்கும் எதுவும் இல்லை. எனக்கும் யோகிபாபுவுக்கும் திருமணம் நடந்ததாக கூறுவது முழுக்க முழுக்க வதந்தி. தயவுசெய்து யாரும் இதனை நம்ப வேண்டாம்’ என நடிகை சபீதா ராய் விளக்கம் அளித்துள்ளார்.

காமெடி நடிகர் #யோகிபாபு க்கும், எனக்கும் சக நடிகர், நடிகை என்பதை தவிர எந்த சம்பந்தமும் இல்லை‌. அவர் நல்ல மனிதர் மற்றும் நல்ல நண்பர். அவ்வளவுதான்.

வதந்திகள் குறித்து
நடிகை சபீதா ராய் விளக்கம் அளித்து வெளியிட்ட வீடியோ, வாட்ஸ்அப் குரூப்பில் வந்தது. pic.twitter.com/ArheBTX61g

— Actor Kayal Devaraj (@kayaldevaraj) November 25, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்