காங்கிரஸ்காரன் என்ற அடையாளத்தை நீக்கிய சிந்தியா ’! அதிர்ச்சியில் காங்கிரஸ் !

திங்கள், 25 நவம்பர் 2019 (16:06 IST)
பிரபல காங்கிரஸ் பிரமுகர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ்காரன்  என்ற தன்னுடைய அடையாளத்தை  டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். அதனால் காங்கிரஸ் கட்சியினர்  கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், ராகுல்காந்திக்கு மிக நெருக்கமானவருமான ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அமைச்சராகவும், எம்.பியாகவும் நாடு முழுவதும் அறியப்பட்டவர்.
 
சமீபத்தில் நடைபெற்ற தேர்ந்தலில்  காங்சியில் தனக்கு போதிய அங்கீகாரம் இல்லை என அவர் பெரிதும் வருந்தியதாகத் தெரிகிறது.
 
அதன்பின்னர் தேர்தல் தோல்வியை அடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த  பின்னர். அவருடன் ஜோதிராதித்யா சிந்தியாவும் தனது ராஜினாமா செய்தார்.
 
இவர் சமூகவலைதளங்களில்  வெளியிடும் கருத்துகள் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்புவார். இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் காங்கிரஸ் காரன் என்ற அடையாளத்தை நீக்கி உள்ளார். அதனால் கட்சியினுள் பெரிதும் சலசலப்பு ஏற்பட்டது.
 
இதுகுறித்து ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளதாவது :டுவிட்டரில் எனது பயோ மிகவும் பெரியதாக இருந்ததால் நீக்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்