போலீஸ் பணியில் நேர்மை தவறினால்.... எஸ்.பியின் வாய்ஸில் வைரல் ஆடியோ

திங்கள், 25 நவம்பர் 2019 (16:34 IST)
ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி,   போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வாக்கிடாக்கியில் பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ராமநாதரபுரம் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி) பணியாற்றுபவர் வருண்குமார். இவர், அந்த மாவட்டத்தில் உள்ள சார்பு ஆய்வாளர் முதல் இரண்டாம் நிலை காவலர் வரை அனைத்து தரப்பு காவலர்களுக்கும் வாக்கிடாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது :
 
நீங்கள் விரும்பும் பணியிடங்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனா பணியின்போது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக பணியாற்றக்  கூடாது.மேலும் நேர்மையாகப் பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் இடமாறுதல் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ  வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்