டுவிட்டரில் இருந்து வெளியேறிய ‘திருச்சிற்றம்பலம்’ நடிகை: என்ன காரணம்?

புதன், 7 செப்டம்பர் 2022 (13:55 IST)
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென டுவிட்டரில் இருந்து வெளியேறி இருப்பது பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவர் ராஷி கண்ணா என்பதும் இவரது நடிப்பு ரசிகர்களால் போற்றப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை பதிவு செய்து வந்த ராஷி கண்ணா திடீரென டுவிட்டரில் இருந்து மட்டும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் எதிர்பாராத காரணத்தினால் டுவிட்டரில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து உங்களுடன் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரைப் பற்றி டுவிட்டரில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்