’திருச்சிற்றம்பலம்’ படக்குழுவினர்களுக்கு வாழ்த்து கூறிய ஷங்கர்!

வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (09:49 IST)
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூல் 100 கோடியை தாண்டி விட்டது என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலர் பாராட்டி நிலையில் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளார் 
 
திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகவும் அழகான படம் என்றும் அருமையான காதல் கதை என்றும் காதலின் வலிகளையும் மிக அருமையாக சொல்லி இருந்தது என்றும் கூறியுள்ளார் 
 
நித்யாமேனன் நடிப்பு மிகவும் அருமை என்றும் அவர் பல்லாயிரக்கணக்கான இதயங்களை வென்று விட்டார் என்றும் ஷங்கர் தனது டுவிட்டரில் கூறினார். மித்ரன் ஜவஹர் இயக்கம் மற்றும் தனுஷ்-அனிருத் ஆகியோர்களின் இணைப்பு ஆகியவை மிக பிரமாதமாக இருந்தது என்றும் இந்த படத்தில் நடித்து இந்த பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
ஷங்கரின் பாராட்டுப் பெற்றதால் திருச்சிற்றம்பலம் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்