சமீபத்தில் வித்யாசாகர் உடல்நலப் பிரச்சனை காரணமாக காலமானார். அதிலிருந்து அவரின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் மீனா, ஒரு பிரபல நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. இதற்குப் பலமுறை அவர் விளக்கம் அளித்துவிட்ட பின்னும் இன்னும் வதந்தி ஓய்ந்த பாடில்லை.
இப்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார் மீனா. அதில் “சமூகவலைதளங்களில் உண்மையைப் பேசுங்கள். என்னைப் போல தனிமையில் வாழும் பெண்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்களின் குழந்தைகளையும் பெற்றோர்களையும் நினைத்துப் பாருங்கள். தற்போதைக்கு எனக்கு மறுமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கு என்பதைப் பற்றி இப்போது எப்படி என்னால் சொல்லமுடியும்” எனக் கூறியுள்ளார்.