தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (17:18 IST)
நடிகர் தனுஷ் நடிக்கும் 43 ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் D 43 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் நாயகியாக நடிக்க மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாளவிகா ‘உங்களுடன் பணிபுரிய மிகவும் ஆவலாக இருக்கிறேன் ( நம் இருவரையும் விரைவில் யாராவது ஒரே படத்தில் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்)’ எனக் கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த தனுஷ் ‘நானும் ஆவலாக இருக்கிறேன்’ எனக் கூறி இருந்தார். இந்நிலையில் இப்போது கார்த்திக் நரேன் தனுஷ் நடிக்கும் படத்துக்கு கதாநாயகி தேடும் படலத்தில் இருக்க, அந்த வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதை இப்போது உறுதிப் படுத்தியுள்ளது சத்யஜோதி நிறுவனம். இதுகுறித்து ‘திறமையும் அழகும் கொண்ட மாளவிகா மோகனன் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்