நடிகை மைனா நந்தினியின் கணவர் தற்கொலையின் பின்னணி?

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (11:23 IST)
நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் நந்தினியின்  அப்பாதான் என்று அவர் கடிதம் எழுதியிருந்தார். இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நந்தினிக்கும் கார்த்திக்கிற்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். 


இந்த நிலையிலேயே திங்கட்கிழமை இரவு கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை  செய்து கொண்டார். கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி கேள்விப்பட்டு மைனா நந்தினி கதறி அழுதார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் கணவர் கார்த்திக், அரசாங்க வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 80 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கியிருந்தார்,   அவருக்கு பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள். எனவே, அவர் மன உளைச்சளில் இருந்தர்.
 
மேலும் கார்த்திகேயனுக்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், கார்த்திகேயன் வெண்ணிலா இடையே  திருமணம் நடைபெர்ற பிறகு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெண்ணிலாவின் கடிதத்தில்  கார்த்திக் பெயர் இருந்ததால் போலீசார் அவரை கைது செய்தது உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்துள்ளது. இதனால் நந்தினி, கார்த்திகேயனை பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இது பர்றி கார்த்திகேயனின் பெற்றோர், நந்தினியின் குடும்பத்தாரிடம்  போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்