ஆன்லைனில் பண மோசடியால் ரூ.57 ஆயிரம் இழந்த நடிகை!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (20:01 IST)
வங்கிக் கணக்கு விவரங்கள் கொடுத்து  பிரபல நடிகை ஒருவர் ரூ.57 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார்.

சமீபகாலமாக ஆன்லைனில் பண மோசடி அதிகரித்து வருகிறது. இதில், சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் இதில், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பான் எண் புதுப்பித்தல் காரணமாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை இழந்து 40 பேரில் ஒருவராக   நடிகை ஸ்வேதா மேனன் புகாரளித்துள்ளார்.

இதுபற்றி நடிகை ஸ்வேதா மேனன் போலீஸில் அளித்துள்ள புகாரில்,  நான் வங்கிக் கணக்கு வைத்துள்ள பேங்கில் இருந்து பேசுவதாக  ஒரு போன் கால் வந்தது. இதையடுத்து, அந்த போன் எண்ணிலிருந்து மேசேஜ் வந்தது.

பின்னர், அந்த லிங்கில் கேட்கப்பட்ட ஐடி எண், பாஸ்வேர்ட் எண், ஓடிபி உள்ளிட்டவற்றை நான் கொடுத்த பின்னர்,  சில நிமிடங்களில் என் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57,636 பணம் எடுக்கப்பட்டது.

மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். மும்பை காவல்துறையினர் இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்