மாபியா கும்பலுடன் தொடர்பா? நடிகை லீனா மரியா கூறிய அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (08:59 IST)
மலையாளத்தில் பிரபலமான நடிகை லீனா மரியா. இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
 
இவர் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்தார். அங்கு லீனா மரியா பாலுக்கு சொந்தமாக பியூட்டி பார்லர் உள்ளது. பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பியூட்டி பார்லரில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் லீனா மரியாவுக்கு 9 சொகுசு கார்களும், பல வீடுகளும் இருப்பதாகவும்,  அவருடைய செயல்பாடுகளில் மர்மம் இருப்பதால்,  மாபியா கும்பலுடன் லீனாவுக்கு  தொடர்பு இருக்கலாம் என்றும்  போலீசார் சந்தேகப்பட்டார்கள்.  இதுகுறித்து விசாரணை நடத்திய போது, லீனா மரியா  போலீசிடம்  சில அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

‘‘சில வாரங்களுக்கு முன்பு மும்பை தாதா ரவி புஜாரா என்ற பெயரில் எனக்கு போன் வந்தது. ரூ.25 கோடி தரவேண்டும் என்று அவன் மிரட்டல் விடுத்தான். அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து 4 முறை மிரட்டல்கள் வந்தன. அதன்பிறகு போலீசில் புகார் அளித்தேன். மாபியா கும்பல் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறது’’ என்று கூறியுள்ளார்.  ஏன் மிரட்டினார்கள்,  அவர்களுக்கும், லீனாவுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
நடிகை லீனா சென்னையில் உள்ள வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்