நடிகை குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் தகவல்!

திங்கள், 10 ஜனவரி 2022 (13:17 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திரை உலக பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அவர்களில் சிலர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகை குஷ்பு தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
இதனை அடுத்து குஷ்பு விரைவில் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்