முதல் வாரத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை!

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (08:56 IST)
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் கிரண். ஜெமினி படம் மூலம் அறிமுகமான அவர் அடுத்து வில்லன், அன்பே சிவம் உள்ளிடட் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானார். ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

அதன் பின்னர் இன்ஸ்டாகிராம் மூலமாக ரி எண்ட்ரி கொடுத்த அவர், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களைப் பகிர்ந்து இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆகி வந்தார். இதன் மூலமாக அவருக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பு அமைந்தது.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக நடிகை கிரண் கலந்துகொண்டார். ஆனால் முதல் வாரத்திலேயே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்