களத்தில் இறங்கிய நடிகை கஸ்தூரி… ம நீ ம வேட்பாளருக்கு பிரச்சாரம்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (12:34 IST)
அரசியல் சம்மந்தமான கருத்துகளை தொடர்ந்து பேசிவந்த நடிகை கஸ்தூரி இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

முன்னாள் நடிகையான கஸ்தூரி சமூக அக்கறை சார்ந்த விஷயங்களில் தனது குரலை அவ்வப்போது பதிவு செய்து வருபவர். திமுக மற்றும் பெரியாரிய இயக்கங்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார். அதனால் அவரை இப்போதே பலரும் அவர் பாஜக ஸ்லீப்பர் செல் என்று சொல்லப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பி டி செல்வகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். அப்போது பேசிய அவர் ‘தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு மக்கள் நீதி மய்யம் இரண்டே ஆண்டுகளில் வேலை வாய்ப்பை உருவாக்கி தரும்’ என உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்