ஓ.டி.டி படங்களுக்கும் சென்சார்: பிரபல நடிகை கருத்து

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (11:59 IST)
திரைப்படங்களுக்கு சென்சார் இருப்பதுபோல் ஓ.டி.டி படங்களுக்கும் சென்சார் அவசியம் என நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.
 
தற்போது ஓ.டி.டி படங்கள் சென்சார் இல்லாமல் ஒளிபரப்பாகி வருவதால் ஆபாச காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கௌதமி சினிமா ஓடிடி எதுவாக இருந்தாலும் சென்சார் அவசியம் என்றும் தணிக்கை இல்லாமல் வரம்பு மீறிய காட்சிகள் ஓ.டி.டி தொடர்களில் வசனங்கள் இடம் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எனவே ஓ.டி.டி  படங்களுக்கும் சென்சார் கொண்டுவர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார். நடிகை கௌதமி நடித்த ஓ.டி.டி வெப்தொடரான ஸ்டோரி ஆஃப் திங்ஸ் என்ற வெப்தொடர் இன்று ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்