இரண்டு சூப்பர் ஸ்டார்களின் நட்பு குறித்து நடிகை கருத்து

வெள்ளி, 21 மே 2021 (22:09 IST)
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது இதுகுறித்த்து பிரபல நடிகை ஒரு கருத்துக் கூறியுள்ளார்.

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்பாபு. இவர் கடந்த 1974 ஆம், ஆண்டு அல்லு சீதாமர ராஜு என்ற படம் தொடங்கி சமீபத்தில் சூர்யாவுடன் சூரரைப் போற்று படம் வரை பலநூறு படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இவரும் தமிழ் சினிமாவில் சூப்பர் ரஜினியும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இவ்விரு சூப்பர்  ஸ்டார்களின் நட்புறவு குறித்து மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி  கூறியுள்ளதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மோகன் பாபு இருவரின் நட்பும் பரிசுத்தமானது மற்றும் ஆழமானது எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்