பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரகசியத்தை கூறிய நடிகை அனுயா

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (11:31 IST)
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் தொடர்ந்து 9 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் இருந்து முதலில் நடிகர் ஸ்ரீ உடல்நிலை சரியில்லாமல் வெளியேறியதை தொடர்ந்து, தற்போது நடிகை அனுயா வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிக்கான காரணம் குறித்த ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

 
பிக் பாஸ் போட்டியாளர்கள் முட்டாள் தனமாக சண்டையிட்டு கொள்வதைக்கூட என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள  மக்கள் ஆர்வமாக உள்ளனர். போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கும், தங்களுக்கும் ஒரே விதமான பிரச்னை  இருக்கின்றவா என தொடர்பு படுத்தி கொள்கின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றவர்கள்  துன்பப்படுத்தி இன்பத்தை பார்ப்பதுதான். இதனால்தான் எல்லா மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார் நடிகை அனுயா.
அடுத்த கட்டுரையில்