இந்நிலையில் அதுமாதிரி யாரும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக மலையாள சினிமா நடிகையான அண்ணா பென் கேரள திரைத்துறை அமைப்பான ஃபெஃப்காவுடன் இணைந்து ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஆடிஷன் என்ற பெயரில் தனியாக அழைத்து யாராவது பாலியல் ரீதியாக அத்துமீறுபவர்களை பற்றி புகாரளிக்க 984 634 2226 மற்றும் 964 534 2226 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். அந்த விழிப்புணர்வு திரைப்படம் இப்போது வைரலாக பரவி வருகிறது.