சிம்புவுக்கு வில்லி இவரா? மாநாடு படத்தில் நடிக்கும் நடிகை!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (09:57 IST)
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் முக்கியமான ஒரு வில்லிக் கதாபாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி நடிக்க உள்ளார்.

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் தொடங்கிய மாநாடு திரைப்படம் கொரோனா பீதியால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவோடு எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் முக்கியமான ஒரு வில்லிக் கதாபாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி என்ற நடிகை நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கதாபாத்திரம் மூலம் தனக்கு சினிமாவில் திருப்பு முனையாக அமையும் என நம்பிக்கையோடு இருக்கிறார் அஞ்சனா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்