நடிகை அஞ்சலி 2007ஆம் ஆண்டில் கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதையடுத்து 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
நடிக்க ஆரம்பித்த முதலிலே அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து அவரை பிரபலமாக்கியது. அதையடுத்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு , வத்திக்குச்சி , சேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 35 வயதாகியும் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கும் அஞ்சலி இன்னுமும் 10 கிளாஸ் பொண்ணு போல் தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரிக்கிறார்.