சமீபத்தில் அர்ஜுன் தாஸோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர, இருவரும் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. அதன் பின்னர் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் எனக் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் ஒரு நேர்காணலில் தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
வாய்ப்புகளை கவருவதற்காக எல்லா நடிகைகளையும் போலவே இவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வருகிறார். ஸ்டைலிஷான மற்றும் கிளாமரான இவரது புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவிக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றது.