எஸ்பிபி மறைவுக்கு பியானா வாசித்து அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (18:18 IST)
எஸ்பிபி மறைவுக்கு பியானா வாசித்து அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்
பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவிற்கு பியானோ வாசித்து அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர் விவேக்கின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு பல பிரபலங்கள் இசையால் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக் தனது பியானோவில் இளையராஜா இசையில் உருவான ’அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி’ என்ற பாடலை பியானாவில் வாசித்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
 
இதுகுறித்த வீடியோவை நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் எஸ்பிபி அவர்களுக்கு வித்தியாசமாக பியானோவில் அஞ்சலி செலுத்திய நடிகர் விவேக்கிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்