தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் விவேக்: என்ன காரணம்?

செவ்வாய், 26 ஜனவரி 2021 (19:35 IST)
தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் விவேக்: என்ன காரணம்?
தமிழக முதல்வரை கடந்த சில நாள்களாக திரையுலகினர் அடிக்கடி சந்தித்து வருகின்றனர் என்பதும் அவர்களில் ஒரு சிலர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் காமெடி நடிகர் விவேக், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது
 
அரசியலுக்கோ/என் சொந்த காரணமாகவோ தமிழக முதல்வர் அவர்களை பார்க்கவில்லை. தமிழ்த் துறவி ”அருட்பா” தந்த வள்ளலார் (1823-1874) தன் வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை ” வள்ளலார் நெடுஞ்சாலை” என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். இன்முகத்துடன் ஏற்றார். நற்செய்தி வரலாம்’ என்று பதிவு செய்துள்ளார்.
 
நடிகர் விவேக்கின் கோரிக்கை மனுவை பரிசீலித்து விரைவில்  வள்ளலார் நெடுஞ்சாலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்