தேர்தலில் மனைவி போட்டி...இளம் நடிகர் உதயநிதியுடன் சந்திப்பு

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (17:31 IST)
நடிகர் விமல் திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதியைச் சந்தித்துள்ளார்.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்நிலையில் நடிகர் விமல் திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதியைச் சந்தித்துள்ளார்.
திமுக சார்பில் போட்டியிடுவர்களுக்கான விருப்ப மனு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான நேர்காணல் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி  மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில் இன்று இருவரும் உதயநிதியை சந்தித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்