ஜூனியர் என் டி ஆர் படத்தில் இணைந்த சிம்பு… ‘தேவரா 2’ அப்டேட்!

vinoth

புதன், 1 அக்டோபர் 2025 (05:57 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரின்  நடிப்பில் ‘தேவரா முதல் பாகம்’கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பின் என் டி ஆர் நடித்த படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

ஜூனியர் என் டி ஆர் நடித்த ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்குப் பிறகு இந்த படம் ரிலீஸான நிலையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் படுதோல்வியாக அமைந்தது. படம் ரிலீஸாகி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் சேட்டிலைட் வியாபாரம் நடக்கவில்லை. இதனால் அதன் இரண்டாம் பாகம் தொடங்கப்படாது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையில் கொரட்டாலா சிவா நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடம் ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்