துருவ நட்சத்திரம் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!

சனி, 30 செப்டம்பர் 2023 (14:23 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து ரிலீஸூக்காக இப்போது காத்திருக்கிறது.

இதையடுத்து படம் நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு 11 இடங்களில் கட் செய்யபப்ட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 25 நிமிடம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்