மிரட்டலான லுக்கில் தங்கலான் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

திங்கள், 17 ஏப்ரல் 2023 (07:54 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் ஷூட்டிங் நடந்தது.

இப்போது 80 சதவீதம் ஷூட்டிங்கை முடித்துள்ள இயக்குனர் பா ரஞ்சித் படத்தின் ரிலீஸ் பற்றி பேசியுள்ளார். அதில் “இன்னும் 25 நாட்கள் ஷூட்டிங் நடக்க வேண்டி உள்ளது. வி எப் எக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் படம் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விக்ரம் ரத்தக்கறையோடு ஆக்ரோஷமான லுக்கில் காணப்படுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்