இந்நிலையில் தற்போது நடந்து வரும் சீசனில், அகில் என்ற போட்டியாளர் சக போட்டியாளர்களைக் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியுள்ளார். அதை நிகழ்ச்சி நடத்துனரான மோகன்லால் கண்டித்து மன்னிப்புக் கேட்க கூறினார். மன்னிப்புக் கேட்ட அகில், தன் கையில் இருந்த அணித்தலைவருக்கான பேண்ட்டை கழட்டி வீசினார். இதனால் கடுப்பான மோகன்லால், கோபத்தில் கத்தி, நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். ஆனால் அவரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சமாதானப்படுத்தி, மோகன்லாலை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவைத்தனர்.