விக்ரம்(1986) படத்தில் நாங்கள் செய்த தவறு என்ன? – ஓப்பனாக பேசிய கமல்ஹாசன்!

சனி, 15 ஏப்ரல் 2023 (15:26 IST)
கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தின் ரோலக்ஸ் என்ற ரோலில் சூர்யா நடித்து இருந்த நிலையில் அந்த ரோலில் நான் தான் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் ஆதரவைப் பெற்றது. இதையடுத்து லோகேஷ் இந்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி விரைவில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் இதுவரை எந்த படமும் பெறாத வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் இதே பெயரில் கமல், 1986 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக உருவாக்கிய விக்ரம் திரைப்படம் தோல்வி அடைந்தது. அந்த படத்தில் தோல்வி பற்றி சமீபத்தில் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “அந்த படத்தை மணிரத்னம் அல்லது சிங்கிதம் சீனிவாசராவ் போன்றவர்கள் இயக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்