நடிகர் விஜய் நேற்று தனது காரில் செல்லும்போது, சாலையில் இருந்த சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்ற வீடியோ வைரலான நிலையில், அவருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று சென்னை, பனையூரில் உள்ள மக்கள் இயக்கம் அலுவலகத்தில் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் செய்திருந்த நிலையில், மதியம் நடிகர் விஜய் அலுவலகத்திற்கு வந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு விஜய் தனது காரில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையில் சிவப்பு சிக்னல் போட்டிருந்தது. ஆனால், நடிகர் விஜய்யின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையானது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், பனையூரில் நடைபெற ஆலோசனை கூட்டத்திற்குக் காரில் செல்லும்போது, இசிஆர் சாலை அக்கரை பகுதியில் அவர் சிக்னலில் நிற்காமல் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றதற்காக போக்குவரத்து போலீஸார் ரூ.500 அபராதம் விதித்து ரசீதை விஜய்க்கு அனுப்பி வைத்தனர்.