மேலும் 'ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாக இருப்பதை அடுத்து அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் 'ஜெயிலர் படத்தை பார்ப்பதற்கு முன்பு கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை பார்த்துவிட்டு செல்லுங்கள் என்று நெல்சன் குறிப்பிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. ஆனால் நெல்சனின் ட்விட்டர் பக்கத்தில் அவ்வாறான பதிவுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.