''இனிமேல் மது அருந்த மாட்டோம்''- ரஜினி ரசிகர்கள் உறுதிமொழி

வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (16:03 IST)
ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்’ ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ திரைப்படம்  பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம்  உலகம் முழுவதும்  இன்று (ஆகஸ்ட் 10 ஆம் தேதி)  ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் இசை வெளியீட்டு விழா, கடந்த 28 ஆம் தேதி  சென்னை   நநேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

பிரமாண்டமாக நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில்  நடிகர் ரஜினிகாந்த், அனிருத், நெல்சன், உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘’ மது அருந்தினால் மூளை சரியாக வேலை செய்யாது. சரியான முடிவு எடுக்க முடியாது. இதனால் குடும்பமும் பாதிக்கும்…  நான் மது அருந்தியதால் நிறைய இழந்திருக்கிறேன்… அனுபவத்தில் கூறுகிறேன் மது அருந்தாதீர்கள்…. ‘’இந்தக் குடிப்பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதைவிட எங்கோ இருந்திருப்பேன்…குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம்’’ என்று கூறியிருந்தார்.

ரஜினியின் பேச்சு தமிழகத்தில் பேசு பொருளானது. இதையடுத்து, அவரது ரசிகர்கள் இனிமேல் குடிக்க மாட்டோம் என்று உறுதியெடுத்தனர்.

இனி மது அருந்த வேண்டாம் என ரஜினிகாந்த் சமீபத்தில் உருக்கமாக கேட்டுக் கொண்ட நிலையில்,  மதுரை மாவட்டம் ஜெயம் தியேட்டரில்  ‘ஜெயிலர்’ படம் பார்க்க வந்த ரஜினி ரசிகர்கள் ''இனி மது அருந்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், இவ்வளவு நாள் தெரியவில்லை. எங்கள் தலைவர் சொன்ன பிறகுதான் புரிகிறது ''என்று தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்