“என் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஒரு ஐடியா குடு மாமா…” விஜய் ஆண்டனியின் ரோமியோ பட ட்ரைலர் எப்படி இருக்கு?

vinoth

செவ்வாய், 26 மார்ச் 2024 (13:18 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வளர்ந்து வந்த விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அடுத்து, சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட பல  படங்களில் நடிக்க அந்த படங்களும் ஹிட்டாகின. இப்போது இசையமைப்பதை நிறுத்திவிட்டு நடிகராக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இதையடுத்து, விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார்.  முக்கிய வேடத்தில் யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விநாயகக் வைத்திய நாதன் இயக்கியுள்ள இப்படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்துள்ளார்.  

கல்யாணத்துக்குப் பின்னரான தம்பதிகளின் வாழ்வில் ஏற்படும் சிக்கலை நகைச்சுவை கலந்து சொல்லும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. படத்தின் டிரைலர் ரிலீஸாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ரம்ஜானை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்