‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடிக்கிறார். கார்த்திக் நரேன் மற்றும் இயக்குநர் கெளதம் மேனன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில், நாக சைதன்யா நடிப்பதாக இருந்தது. அரவிந்த் சாமிக்கு வில்லனாக அவர் நடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்னையாலும், அக்டோபரில் திருமணம் என்பதாலும் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக, ‘மாநகரம்’ படத்தில் நடித்த சுந்தீப் கிஷண் இந்தப் படத்தில் நடிக்கிறார்.