3 நாட்களாக வாழ்த்து வெள்ளத்தில் மிதக்கிறேன் - "விடுதலை" சூரி மகிழ்ச்சி!

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (13:49 IST)
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் சூரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 
 
சூரி இனிமேல் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்பதே கேள்விக்குறியாக தான் உள்ளது. அந்த அளவுக்கு அழுத்தமான ரோலில் தன் முழு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். நேர்மையான கான்ஸ்டபிள் குணசேகரன் கதாபாத்திரத்தில் சூரி வாழ்ந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். அவரின் இயல்பான நடிப்பும், சாந்தமான தோற்றமும் படத்தின் வெற்றிக்கு வலு சேர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி கூறி ட்விட் செய்துள்ளார் நடிகர் சூரி, அந்த பதிவில், அனைவருக்கும் வணக்கம், மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொது மக்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கு எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம் என்று நன்றி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்