கிரிக்கெட் பயிற்சி மையம் தொடங்கும் தமன்னா பட நடிகர்

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (05:15 IST)
சமீபத்தில் வெளியான பிரபுதேவா, தமன்னா நடித்த வெற்றிப்படமான 'தேவி' உள்பட தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் நடிகர் சோனுசூட். இவர் தற்போது திரையுலகில் பிசியாக இருந்தாலும் தீவிர கிரிக்கெட் ரசிகராம்.


 


இந்தியாவில் பல சச்சின் மற்றும் விராட் கோஹ்லியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிரிக்கெட் பயிற்சி மையங்களை தொடங்க முடிவெடுத்துள்ளாராம்

முதல்கட்டமக மும்பை மற்றும் பஞ்சாபில் கிரிக்கெட் பயிற்சி மையங்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ள சோனு சூட் படிப்படியாக நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த மையங்களை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளாராம்

இதுகுறித்து சோனுசூட் கூறியபோது, 'என்னுடைய கிரிக்கெட் மையங்கள் விளையாடுவதற்கு நல்ல பிட்சுகளை ஏற்படுத்துவதோடு, திறமைசாலிகளை உருவாக்குவதற்கான சிறந்த பயிற்சியையும் வழங்கும்' என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்