தற்கொலைக்கு வாய்ப்பு உள்ளது. சுசிலீக்ஸ் குறித்து சத்யராஜ் அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (23:17 IST)
கோலிவுட் திரையுலக கடந்த சில நாட்களாக கலங்கடித்து கொண்டிருக்கும் விஷயம் சுசிலீக்ஸ். பாடகி சுசித்ராவின் டுவிட்டரில் அடுத்து எந்த பிரபலத்தின் அந்தரங்க வீடியோ வரும், அதற்கு விமர்சனம் எழுதலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கின்றது.




இந்நிலையில் சுசித்ரா பெயரில் வெளியிடும் அந்த மர்ம நபருக்கு திரையுலகினர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் போலீஸ் புகார் மற்றும் சைபர் கிரைமில் புகாரும் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் சத்யராஜ் இதுகுறித்து கூறியதாவது: நல்ல நண்பர்களை, காதலர்களை பார்த்து தேர்ந்தெடுங்கள். விளையாட்டாக எடுக்கும் புகைப்படங்கள் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைக்கு வினையாக மாறலாம். பெண் நம்முடன் இங்கு வசிப்பவள், வேற்றுகிரக வாசி அல்ல. இது போல் புகைப்படங்களை வெளியிடுவதால் பலர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால் இது போன்ற செயலை செய்ய வேண்டாம். பாதிக்கப்பட்ட பல பெண்களின் தகப்பனாக கேட்டுக்கொள்கிறேன் என்று உருக்கமாக பேசி இருக்கிறார். சத்யராஜின் இந்த வேண்டுகோளுக்கு சுசித்ரா பெயரில் இருக்கும் அந்த மர்ம நபர் செவி சாய்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
அடுத்த கட்டுரையில்