நாசருக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு எமிரேட்!
கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் நாசருக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட் வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசா வழங்கியதை அடுத்து அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் நாசரின் மனைவி இது குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது