கருணாஸ் மகள் திருமணம்… கென் பகிர்ந்த புகைப்படம் வைரல்!

திங்கள், 6 பிப்ரவரி 2023 (08:52 IST)
நடிகர் கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து கென் கருணாஸ் பகிர்ந்த புகைப்படம் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை , குணச்சித்திரம் மற்றும் கதாநாயகன் என பல வேடங்களில் நடித்து வருபவர் கருணாஸ். இடையில் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்.

இவருக்கு கென் என்ற மகனும் டயானா என்ற மகளும் உள்ளனர். கென் அசுரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள நிலையில் இப்போது கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்துள்ளது. இது சம்மந்தமான குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கென் “அக்கா மற்றும் மாமாவுக்கு திருமண வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்